நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கே இலவச 'லேப்டாப்' வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு அரசின்
சார்பில் இலவசமாக 'லேப்டாப்' என்ற மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.இதில் 2017 - 18ம் ஆண்டு பிளஸ் 2 படித்தவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு 2018 - 19ம் கல்வி ஆண்டில் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.அதன்படி 2017 - 18ல் பிளஸ் 2 முடித்தவர்கள்; 2018 - 19ல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பவர்கள் என மூன்று பிரிவினருக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக 'எல்காட்' நிறுவனம் வழியாக 15.53 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டன.இந்நிலையில் லேப்டாப் வழங்கும் முடிவில் அரசு மாற்றம் செய்துள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டான 2019 - 2020ல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து முதலில் லேப்டாப் வழங்கப்படும். அதன்பிறகே ஏற்கனவே படித்து முடித்தவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இதனால் லேப்டாப் கிடைக்கும் என பிளஸ் 2 முடித்து இரு ஆண்டுகளாக காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.