கணினி ஆசிரியர் பதவிக்கான தேர்வின் வினா - விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பதவியில் 814 இடங்களை நிரப்ப ஜூன் 23ல் கணினி வழி தேர்வு நடந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் நேற்று மூன்று மையங்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்பட்டது.இதையடுத்து தேர்வர்கள் ஒவ்வொருவரின் வினா - விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. அறிவித்துள்ளது.டி.ஆர்.பி.யின் www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களின் பயனாளர் குறியீட்டு எண் மற்றும் ரகசிய சொல்லை பயன்படுத்தி விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம் என டி.ஆர்.பி. தலைவர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.