WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 2, 2019

இலவச லேப்டாப் தாமதம் ஏன் முதன்மை செயலர் விளக்கம்.

'நீட், ஜெ.இ.இ., போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்பதற்காகவே நடப்பு கல்வி ஆண்டு (2019--20) பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது' என அரசு சிறப்பு திட்ட செயலாக்க கூடுதல் முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்துள்ளார்.

நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. 2017- -18 மற்றும் 2018--19 ல் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இன்னும் வழங்கவில்லை. இதனால் அந்த மாணவர்கள் போராடி வருகின்றனர்.இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஹன்ஸ்ராஜ் வர்மா அனுப்பிய சுற்றறிக்கை:அரசு 15 லட்சத்து 53 ஆயிரத்து 359 லேப்டாப்களை மாணவர்களுக்கு ஒதுக்கி உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1, 2 படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்குகிறோம்.
இம்மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தேவையான வினா வங்கிகளை 'கியூ.ஆர்.கோடு' மூலம் டவுன்லோடு செய்து லேப்டாப்களில் படிக்கலாம். இதற்காகவே முதல் இரண்டு கட்டமாக அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மூன்றாம் கட்டமாக 2018--19ல் பிளஸ் 2 முடித்தோருக்கும், நான்காம் கட்டமாக 2017--18ல் முடித்தோருக்கும் வழங்கப்படும். எனவே அந்த மாணவர்கள் போராட்டத்தை தவிர்க்குமாறு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.