10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், துணைத் தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழாகவே dge.tn.gov.in இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதே போல், 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வியாழன் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அடுத்த மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.