WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 26, 2021

9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

 

''ஒன்பது, 1௦ம் வகுப்பு மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவழைப்பது குறித்து, பெற்றோர்களிடம் கருத்து கேட்டபின் முடிவு அறிவிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடில், நேற்று அவர் கூறியதாவது: பள்ளிகளில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு, வகுப்புகளை துவங்குவது குறித்து, கல்வியாளர்கள், பெற்றோர்களிடம் ஆலோசித்து, கருத்து கேட்டு, அதன் பின் முடிவு அறிவிக்கப்படும்.பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், மாணவியர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று வந்ததாக வதந்தி பரப்பப்படுகிறது. இரண்டு ஆசிரியர்களுக்கு தொற்று சந்தேகம் ஏற்பட்டு பரிசோதித்த போது, இல்லை என, உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில், ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, பெற்றோரின் மனநிலையை புரிந்து தகவல் வெளியிட வேண்டும்.தமிழகத்தில், 82 ஆயிரம் ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது, ஆசிரியர்கள் தேவையின் அடிப்படையில், அப்போது, தேர்ச்சி பெற்றவர்களை பணியில் நியமிக்கவும், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தவும் வழிகாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.