கேட் நுழைவுத் தேர்வில் 12 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஐஐஎம் போன்ற தேசிய அளவிலான முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை மேலாண்மை படிப்புகளில் சேர, கேட் (Common Admission Test-CAT) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு நாடு முழுவதும் 170 மையங்களில் கடந்த நவம்பர் 30-ம் தேதி நடைபெற்றது. 2.58 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இத்தேர்வு முடிவுகளை கோழிக்கோடு ஐஐஎம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதில், 12 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். 26 பேர் 99.99 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் தேர்ச்சியில் மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
கேட் தேர்வு முடிவுகளை iimcat.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கட்ஆஃப் மதிப்பெண் 90-க்கு மேல் நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கேட் மதிப்பெண் மூலம், ஐஐஎம் மட்டுமின்றி, 93 இதர உயர்கல்வி நிறுவனங்களிலும் மேலாண்மை படிப்புகளில் சேரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.