தமிழகத்தில், கொரோனா பிரச்னை காரணமாக, 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், மீண்டும், 19ல் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.ஏற்கனவே, புதிய கல்வி ஆண்டு பிறந்து, ஏழு மாதங்கள் வரை, பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால், மீதமுள்ள நாட்களில், பாடங்களை நடத்தி முடிக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாட விபரங்கள், முதன்மை கல்வி அதிகாரிகளால், பள்ளி ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன்படி, பாடங்கள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஒன்பதாம் வகுப்புக்கான, குறைக்கப்பட்ட பாடத்திட்டமும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் விபரங்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கிடையில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, பள்ளிகளை துவங்குவது குறித்து அதிகாரிகள் அளவில், நேற்று ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் ஒப்புதல் அளித்ததும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.