ஆசிரியர், அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த போராட்டத்தை முடிவு செய்ய, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நாளை மறுநாள் நடக்கிறது.
தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள்; அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தரப்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுதல், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு, முதல்வர் மற்றும் துறை அமைச்சர்களிடம், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில், பல முறை மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கோரிக்கைகள் குறித்து, அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில், பிப்ரவரி முதல் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து விவாதிக்க, ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நாளை மறுநாள் திருச்சியில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.