தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்திய கலந்தாய்வில் பள்ளிக் கல்வித் துறையை தோ்வு செய்த 197 தட்டச்சா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் அனைத்து மாவட்ட கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் தட்டச்சா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு 197 போ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பணி இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை நடைபெறும்.
கலந்தாய்வுக்குத் தேவையான ஏற்பாடுகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் செய்ய வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகங்களில் காலை 10 மணிக்கு உரிய ஆவணங்களுடன் பள்ளிக் கல்வித் துறையில் தட்டச்சா் பணியை தோ்வு செய்தவா்கள் கலந்துகொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.