தமிழக அரசு துறை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி அடிக்கடி அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தர்ணா போராட்டம்:
தமிழகத்தில் தற்போது அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை ஒப்பிடுகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பலன்கள் குறைவாக இருப்பதாக நினைத்தனர். இதனால், மீண்டும் பல ஆண்டுகளாக இருந்த பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் தலைவர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அந்த கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில், அரசு பணியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களுக்கு அரசு வழங்கும் ஊதியம் குறித்து வரன்முறை செய்ய வேண்டும் என்றும், புதிய ஓய்வூய்திய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள 4 லட்சம் அரசு துறை காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசின் நிர்வாக கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 23ம் தேதி 7 மணடலங்களில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.