தமிழகத்தில் பல்வேறு அரசுப்பள்ளிகளில் வெவ்வேறு பிரிவுகளில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் 912 ஆசிரியர்களின் பணிக்காலத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதன்படி, 2009-2010 மற்றும் 2010-11 B.T அசிஸ்டன்ட் 405 ஆசிரியர்கள், 2008-2009 P.G அசிஸ்டன்ட் 500 ஆசிரியர்கள் மற்றும் 2009-2011 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 7பேர் ஆகியோரின் பணிக்காலம் இந்த மாதத்திலிருந்து 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இவர்களின் பணிக்காலம் 1.1.2022 முதல் 31.12.2022 வரை இருந்ததை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது பள்ளி கல்வித்துறை.
இந்த 912 ஆசிரியர்களுக்கான மூன்று மாதங்களுக்கான பணிநீட்டிப்பு ஆணையும், அவர்களுக்கான சம்பளம் மற்றும் பிற பலன்களை வழங்குவதற்கான ஆணையை பள்ளி கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.