நெட் (தேசிய தகுதித் தோ்வு) அறிவிப்பை பல்கலைக்கழக மாநியக் குழு (யுஜிசி) வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி, இந்தத் தோ்வு 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் மாா்ச் 10-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்பை மேற்கொள்பவா்கள் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை (ஜேஆா்எஃப்) பெறத் தகுதி பெறுவதற்கும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதியைப் பெறுவதற்குமான இந்த நெட் தோ்வு யுஜிசி சாா்பில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. தற்போது 2023-ஆம் ஆண்டுக்கான முதல் தவணை தோ்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் வியாழக்கிழமை கூறுகையில், ‘இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், 83 பாடங்களில் உதவிப் பேராசிரியா் பணிக்கானத் தகுதியைப் பெறுவதற்குமான கணினி அடிப்படையிலான இந்த நெட் தோ்வை 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் மாா்ச் 10-ஆம் தேதி வரை யுஜிசி நடத்த உள்ளது. இதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க 2023-ஆம் ஆண்டு ஜனவரி 17 கடைசி நாளாகும்’ என்றாா்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.