WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 20, 2023

தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழுக்க போராட்டபோராட்டம்

    தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்நாடு அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் கூட்டமைப்பின் சார்பாக  சென்னை, செய்யாறு, குடியாத்தம், திண்டிவனம், திருவண்ணாமலை, கடலூர்,சிதம்பரம், இராமநாதபுரம், காட்டுமன்னார்கோயில், பரமக்குடி, பூலாங்குறிச்சி,ஆத்தூர்,புதுக்கோட்டை, அரியலூர் போன்ற 50-க்கும் மேற்பட்ட அரசு கல்லூரிகளில்  வாயில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலானவர்கள் 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள 1895 கௌரவ விரிவுரையாளர் நியமனங்கள் 100% வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது வரவேற்கத்தக்கது. ஆனால்  1895 கௌரவ விரிவுரையாளர் நியமனம் சம்பந்தமாக 25-11-2022 தேதியிட்ட 269 அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி அரசு கல்லூரி பணி அனுபவத்திற்கு முக்கியத்துவம் தராமல் நியமனங்கள் நடைபெற்றுள்ளது. புதிதாக நியமனம் செய்யப்பட்ட கௌரவ விரிவுரையாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்த மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் போதுமான காலிப்பணியிடம் இருந்தும் கூட வேண்டுமென்றே  தொலைதூர மாவட்டத்திற்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பணி வாய்ப்பு பெற்ற ஒரு சில மகளிர் கௌரவ விரிவுரையாளர்கள் தொலைதூர பயணத்தினால் பணிக்கு சேர விருப்பம் இல்லாமல் பணியினை வேண்டாம் என வேறு வழி இன்றி விட்டுக் கொடுப்பதாக  தெரிய வருகிறது.  குறிப்பாக அரசு கல்லூரி பணி அனுபவத்திற்கு ஒரு சதவீதம் கூட முக்கியம் தரப்படவில்லை. இதனால் அண்ணாமலை மிகை பேராசிரியர் பணி நிரவல்  காரணமாகவும், நிரந்தரப் பேராசிரியர் பணி மாறுதல் காரணமாகவும் பணி வாய்ப்பினை இழந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இதனால் கிட்டத்தட்ட 90-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணி வாய்ப்பு பெற முடியாமல் வெளியே காத்திருக்கின்றனர். இதே நடைமுறையை பின்பற்றி அரசு கல்லூரியில் தற்போது பணியாற்றி வரக்கூடிய கௌரவ விரிவுரையாளர் களையும் மே மாதத்தில் வெளியே அனுப்பிய பின் மீண்டும் இதே நடைமுறையை பின்பற்றி நியமனம் செய்யப் போவதாக  பத்திரிகை செய்திகள் தெரிவிக்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். எனவே தமிழகம்  முழுவதும் உள்ள அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக 1)  22.3.2010 தேதியிட்ட திமுக அரசு ஒப்பந்த வாக்குறுதி படி அல்லது 56 அரசாணையை  பின்பற்றி பணி வரன்முறை செய்திட கோரியும் 2)யுஜிசி பரிந்துரைப்படி  50000  ரூபாய்  சம்பளம் வழங்க கோரியும் 3) அனைத்து கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பணிபாதுகாப்பு வழங்க கோரியும்  வாாாால் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள்  கலந்து கொண்டனர். சில கல்லூரிகளில் பல்கலைக்கழக தேர்வு மற்றும் அதை சார்ந்த பணிகள் நடைபெறுவதாலும், ஒரு சில கல்லூரிகள்  கல்லூரி விடுமுறையில் உள்ளன. எனவே வருகின்ற திங்கட்கிழமையும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவினை பொறுத்து அடுத்த கட்ட போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளதாகவும்,



அது மட்டுமல்லாது ஒரு சில முக்கிய அரசு கட்சித் தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.