WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 26, 2024

11, 12-ம் வகுப்பு மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்: இணையவழியில் பதிவேற்றம் செய்ய தேர்வுத் துறை உத்தரவு.

 


தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளி தலைமையாசிரியர்கள் ஜன.30 முதல் பிப்.11-க்குள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தொடர்ந்து மாணவர்களுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பிளஸ் 2 வகுப்புக்கு பிப்.6 முதல் 13-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப்.13 முதல் 16-ம் தேதி வரையும் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.