WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 26, 2024

11, 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு: தேர்வுத்துறை வழிகாட்டுதல்கள் வெளியீடு.

 

11, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு குறித்து அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழக பள்ளிக் கல்வியில் 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதற்குமுன் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்.12 முதல் 24-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கு பிப்.12 முதல் 17-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிப்.19 முதல் 24-ம் தேதி வரையும் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்.

இதையடுத்து மாணவர்களின் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவுசெய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பிப்.5 முதல் 17-க்குள் தேர்வுத் துறை வலைதளத்தில் (http://www.dge.tn.gov.in/) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மாணவர்களின் செய்முறை மதிப்பெண் விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வின்போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உட்பட வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.