பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 20-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை மார்ச் 15-ம் தேதியும், தேர்வு மைய படிவங்களை 16-ம் தேதியும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஹால் டிக்கெட்டை மார்ச் 20-ம் தேதி காலை முதலும், தேர்வு மைய படிவங்களை அதே நாளில் பிற்பகல் முதலும் பதிபெயர்
பட்டியலில் திருத்தம்: இதற்கிடையே, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய பள்ளிகளுக்கு மார்ச் 18-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறை அவகாசம் அளித்துள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத்துக்கு சென்று, தங்கள் பள்ளிக்கான பயன்பாட்டாளர் எண், கடவுச்சொல்லை பயன்படுத்தி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.விறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.