WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 1, 2024

மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் மேலும் நீட்டிப்பு.

மத்திய பல்கலை.களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.


அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2024-25) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 27-ல்தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.


தற்போது பல்வேறு தரப்பின்கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


அதைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் ஏப்ரல் 6, 7-ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். ஏதேனும் சிரமம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண்கள் அல்லது cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு.. இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.