WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 30, 2024

தமிழக பள்ளிக் கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்.

 

தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக ச.கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி இன்றுடன் (ஜூன் 30) பணி ஒய்வு பெறுகிறார். 1994-ம் ஆண்டு மாவட்டக் கல்வி அலுவலராக தனது பணியை தொடங்கியவர், இணை இயக்குநர், பொது நூலகத் துறை இயக்குநர் உட்பட துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்.

கல்வி துறையில் 30 ஆண்டு: நூலகத் துறை இயக்குநராக இவர் இருந்த போது அண்ணா நூற்றாண்டு நூலக கட்டுமானப் பணிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கினார். 2023-ம் ஆண்டில் பள்ளிக்கல்வி இயக்குநரான அறிவொளி ஓராண்டு பணிக்கு பின்னர் இன்று ஒய்வு பெறுகிறார். கல்வித் துறையில் சுமார் 30 ஆண்டுகாலம் பணியாற்றிய அறிவொளி, துறைசார்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி யுள்ளார். இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறையின் புதிய இஇது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அறிவிப்பு விவரம்; தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், பள்ளிக் கல்வி இயக்குநராகவும், தேர்வுத் துறை இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா,தொடக்கக் கல்வி இயக்குநராகவும் பணியிட மாறுதல் செய்யப்படுகின் றனர். இதேபோல், எஸ்சிஇஆர்டி இயக்குநராக உள்ள ந.லதா, தேர்வு துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. புதிதாக பொறுப்பு ஏற்கவுள்ள கண்ணப்பன், ஏற்கெனவே பள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த மூத்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.யக்குநராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.