WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 8, 2023

எமிஸ் வேலை வந்தாச்சு... இரண்டே நாட்கள் தான்... அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!

 


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்து பராமரிக்கும் தளமாக EMIS காணப்படுகிறது. இதன் பொருள் கல்வி சார் தகவல்களை மேலாண்மை செய்யும் அமைப்பு (Education Management Information System). இதில் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமின்றி கல்வி சாரா மன்ற செயல்பாடுகளின் விவரங்களும் இடம்பெறும். அதாவது, உரிய நேரத்தில் ஆசிரியர்கள் தான் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


​எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம்


இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி ஐஏஎஸ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பள்ளி அளவில் நடந்த போட்டிகள், ஆகஸ்ட் மாதம் வட்டார அளவில் நடந்த போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் வெற்றியாளர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றும் செய்யும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன.

வரும் 10ஆம் தேதி வரை டைம்



இவற்றை வரும் 10ஆம் தேதிக்குள் (10.10.2023) முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர செப்டம்பர் மற்றும் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள மன்ற செயல்பாடுகளில் இதேபோல் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் விவரங்களை உரிய நேரத்தில் முடிக்கவும் அறிவுறுத்தப்படுள்ளது. இதற்கான விரிவான கால அட்டவணை அளிக்கப்பட்டுள்ளது. அதில், செப்டம்பர் மாதம் பள்ளி அளவில் மன்ற நிகழ்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய நாள் அக்டோபர் 13.

​கல்வி சாரா மன்ற செயல்பாடுகள்


இந்த விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க கடைசி நாள் அக்டோபர் 16. இதையடுத்து அக்டோபர் மாதம் பள்ளி அளவில் நடைபெறும் மன்ற நிகழ்வுகள் அக்டோபர் 31க்குள் நிறைவு பெற வேண்டும். அவற்றை நவம்பர் 4க்குள் பதிவேற்றம் செய்வது அவசியம். நவம்பர் மாதம் பள்ளி அளவில் நடைபெறும் மன்ற நிகழ்வுகளை நவம்பர் 15க்குள் முடிக்க வேண்டும். இதுதொடர்பான தகவல்களை நவம்பர் 20க்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்.

நவம்பர் டூ பிப்ரவரி



இதேமாதம் வட்டார அளவிலான மன்ற நிகழ்வுகளை நவம்பர் 20 முதல் 30க்குள் முடிக்க வேண்டும். எமிஸ் தளத்தில் டிசம்பர் 4க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். டிசம்பர் மாதம் பள்ளி அளவிலான மன்ற நிகழ்வுகளை டிசம்பர் 10க்குள்ளும், எமிஸ் தள பதிவேற்றத்தை டிசம்பர் 23க்குள்ளும் முடிக்க வேண்டும். ஜனவரி மாதம் பள்ளி அளவிலான மன்ற நிகழ்வுகளை அம்மாதம் 31ஆம் தேதிக்குள்ளும், எமிஸ் தளத்தில் பிப்ரவரி 5க்குள்ளும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வட்டார அளவிலான மன்ற செயல்பாடுகள்


பிப்ரவரி மாதம் பள்ளி அளவிலான மன்ற நிகழ்வுகளை அம்மாதம் 15க்குள்ளும், எமிஸ் தளத்தில் 20ஆம் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும். அதுவே வட்டார அளவிலான மன்ற செயல்பாடுகளை பிப்ரவரி 20 முதல் 29 வரையிலும், எமிஸ் தளத்தில் பதிவேற்ற பிப்ரவரி 4ஆம் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மன்ற செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்பது தொடர்பாக கூடுதல் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

விவரங்களை மாற்றம் செய்ய முடியாது



அதன்படி, பள்ளி அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று, எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே வட்டார அளவில் பங்கேற்க வேண்டும். இவர்களை தவிர்த்து வேறு மாணவர்கள் வட்டார போட்டிகளில் பங்கேற்க கூடாது. தவிர்க்க முடியாத காரணத்தால் வட்டார போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை எனில் எமிஸ் தளத்தில் ஆப்சென்ட் எனக் குறிக்க வேண்டும். இந்த தளத்தில் பள்ளி அளவிலான விவரங்களில் மாற்றம் செய்ய முடியாது. எனவே எந்தவித தவறும் இன்றி சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.