அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்பட்டன.
நடப்பு கல்வியாண்டின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஒப்பிட்டு பார்த்து, அதற்கேற்ப கூடுதல் பயிற்சி வழங்க அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநில கற்றல் அடைவுத் தேர்வு (ஸ்லாஸ்) குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் கீழ் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அதனை முறையாக ஒப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய திறனறித் தேர்வு, முதல்வர் திறனறித் தேர்வு, ஸ்லாஸ் மற்றும் பொதுத்தேர்வுகள் எனத் தேர்வுகள் அடுத்தடுத்து அணிவகுத்துள்ளன. தேர்விற்கு தயாராக குறைந்த காலமே உள்ளதால், மாணவர்களின் தேர்ச்சியை உறுதி செய்யும் வகையில், அவர்களது வருகை பதிவை 100 சதவீதம் உறுதிப்படுத்த, வகுப்பு ஆசிரியர்களுக்கு மாவட்ட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.