புதிய பள்ளி பாடத்திட்டம் குறித்து, கருத்து கூற விரும்புவோர், ஜன. 25ம் தேதி வரை, கருத்து தெரிவிக்கலாம். உலகெங்கும் வாழும் தினமலர் வாசகர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று தினமலர் வலியுறுத்துகிறது.
தமிழக பள்ளிக்கல்விக்காக, புதிதாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், புதிய பாடத்திட்டங்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில், உயர்மட்ட வல்லுனர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டன.
இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்களை உருவாக்கியது.
இந்த பாடத்திட்டங்கள், இன்று 'https://tnschools.gov.in' இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ளன. இது குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை அதே இணையதளத்தில் உள்ள படிவத்தின் வாயிலாக தங்களின் சுய விபரங்களுடன் வரும் 25ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.