2025-26 கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி 17 முதல் தொடங்கப்படுகிறது. இந்நிலையில், மார்ச் 3-ம் தேதி நடைபெறும் தேர்வு நிர்வாக காரணத்தினால் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு 10-ம் வகுப்பிற்கு மார்ச் 11-ம் தேதியும், 12-ம் வகுப்பிற்கு ஏப்ரல் 10-ம் தேதியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 2026 தேதி மாற்றம்
10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு 2026-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருந்த பாடங்களுக்கான தேர்வுகள் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் அட்டவணையில் படி திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களில் இந்த தேதி மாற்றப்படுவதாகவும், பள்ளிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேதி மாற்றம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை தவிர அக்டோபர் மாதம் வெளியிட்ட இறுதி பொதுத்தேர்வு அட்டவணையின் படி, அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
அதே போன்று, மாற்றப்பட்ட தேர்வு தேதிகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாற்றப்பட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
மாற்றப்பட்ட பாடங்கள்
10-ம் வகுப்பிற்கு 13 பாடங்களும் 12-ம் வகுப்பிற்கு ஒரு பாடமும் மாற்றப்படுகிறது.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை 2026
2025-26 கல்வி ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு உத்தேச அட்டவணை இந்த வருடம் செப்டம்பர் மாதமே வெளியானது. அதனைத்தொடர்ந்து, இறுதி அட்டவணை தேர்விற்கு 110 நாட்களுக்கு முன்பாகவே அக்டோபர் மாதம் வெளியானது. இந்தாண்டு முதன்முறையான 10-ம் வகுப்பிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
2 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு 2026-ம் ஆண்டில் பிப்ரவரி 17 முதல் தொடங்குகிறது. 10-ம் வகுப்பில் 83 பாடங்களுக்கு மார்ச் 10 வரை தேர்வு நடைபெற உள்ளது. அதே போன்று, 12-ம் வகுப்பிற்கு 120 பாடங்களுக்கு ஏப்ரல் 9 வரை தேர்வு நடைபெறவுள்ளது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தேர்வு நடத்தப்படும்.
இரண்டாம் கட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 15 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அட்மிட் கார்டு வெளியீடு எப்போது?
தேர்விற்கு 1 மாதத்திற்கு முன்பாகவே மாணவர்களுக்கான அட்மிட் கார்டு தயாரிக்கப்பட்டு, வெளியிடப்படும். அந்த வகையில், ஜனவரி மாதம் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்மிட் கார்டு வெளியாகும். பள்ளிகளின் வழியாக மாணவர்கள் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து பெற்றுகொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.