தமிழக அரசின் ஓய்வூதிய திட்டம் திருப்தி அளிக்காததால், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க கோரி, வரும், 10ல், அரசு பணியாளர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை:
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக, தேர்தல் கால வாக்குறுதி அளித்து விட்டு தற்போது காலம் கடந்து, 10 சதவீதம் மாதந்தோறும் ஊதியத்தில் பிடித்தம் செய்து, 50 சதவீத ஓய்வூதியம் அளிக்கப்படும் என்பது ஏற்கத்தக்கது அல்ல. தமிழக அரசின் முடிவு, ஏமாற்றம் அளிக்கிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்த காலத்தில், ஜி.பி.எப்.,க்கு பணம் பிடித்தம் நடைமுறையில் இருந்தது. அந்த நடைமுறை இதர, மூன்று ஓய்வூதிய திட்டங்களும் புறக்கணித்து விட்டன.
அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, வரும், 10ல், சென்னை, கோவை, திருச்சி, நாகப்பட்டினம், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.