WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 23, 2024

தொழிற்பயிற்சியுடன் கூடிய பட்டப்படிப்பை கல்லூரிகளில் கொண்டுவர யுஜிசி திட்டம் .

 



பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தொழிற்பயிற்சியுடன் கூடிய பட்டப்படிப்பு திட்டத்தை கொண்டுவர இருப்பதாக யுஜிசி அறிவித்துள்ளது.



இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி இன்று வெளியிட்ட அறிவிப்பு விவரம்: உயர்கல்வி நிறுவனங்களில் தொழிற் பயிற்சியுடன் கூடிய பட்டப்படிப்பு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பட்டப் படிப்புகளில் தொழிற் பயிற்சிகளை இணைப்பதன் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய முடியும். அதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய வரைவு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 3 ஆண்டு இளநிலை பட்டப் படிப்பை பயிலும் மாணவர்கள் 1 முதல் 3 பருவங்களும், 4 ஆண்டு இளநிலை படிப்பை படிப்பவர்கள் 2 முதல் 4 பருவங்களும் தொழிற் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பயிற்சி காலத்தில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த படிப்பை பயிற்றுவிக்க விரும்பும் கல்வி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்பன உட்பட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.


அந்த வரைவு வறிக்கையை யுஜிசியின் /www.ugc.gov.in/எனும் வலைதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். இந்த வரைவு அறிக்கை குறித்த தங்கள் பரிந்துரைகள், கருத்துகளை கல்வியாளர்கள், தொழில் முனைவோர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் கூறலாம். அதன்படி பரிந்துரைகள், கருத்துகளை நவம்பர் 16-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.