WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 17, 2026

தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நீக்கமா?

 

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் உள்ள காலி இடங்​களில், பள்ளி மேலாண்​மைக் குழு மூலம் நியமிக்​கப்​பட்ட தற்​காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வரு​கின்​றனர். குறிப்பாக, பொதுத்​தேர்வு நடை​பெறும் 10-ம் வகுப்பு மற்​றும் பிளஸ்-2 வகுப்​பு​களுக்கு கூடு​தல் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டு, ஆசிரியர்கள் நியமிக்​கப்​பட்​டனர். இந்நிலை​யில், டிஆர்பி மூலம் தேர்வு செய்​யப்​பட்ட முது​நிலை ஆசிரியர்கள், உடற்​கல்வி இயக்​குநர் மற்​றும் கணினி பயிற்​றுநர்​கள் என மொத்​தம் 1,996 பேருக்கு முதல்​வர் ஸ்டா​லின் பணி நியமன ஆணை​களை வழங்​கி, அவர்​கள் பணி​யில் சேர்ந்​துள்​ளனர்.

இதன் எதிரொலியாக, 10 மற்​றும் 12-ம் வகுப்​பு​களுக்கு பாடம் எடுத்து வரும் தற்​காலிக ஆசிரியர்கள் விடுவிக்கப்படும் நிலை உள்​ளது. அடுத்த மாதம் பொதுத்​தேர்வு நடை​பெற உள்ள நிலை​யில், மாணவர்​களின் கல்வி பாதிக்​காத வகை​யில், தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்​றோர்​கள், கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.