WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 21, 2024

குரூப் 2A தேர்வு முறையில் திடீர் மாற்றம்! டி.என்.பி.எஸ்.சி. முக்கிய அறிவிப்பு.

 

கணினி வழியில் இல்லாமல், ஓ.எம்.ஆர்., முறையில் குரூப் 2 ஏ முதன்மை தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2540 குரூப் 2 மற்றும் குரூப் 2A பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த செப்.14ம் தேதி நடத்தப்பட்டு அதன் முடிவுகள் டிசம்பர் 12ம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து, முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும். 2 தாள்கள் கொண்ட தேர்வில், 2ம் தாள் தேர்வு கணினி வழித்தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், குரூப் 2A பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வு ஓ.எம்.ஆர்(OMR - Optical mark recognition) எனப்படும் ஒளிக்குறி உணரி முறையில் நடத்தப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி,, அறிவித்து இருக்கிறது.

மேலும் குரூப் 2, 2A பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வின் பொது தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்துக்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான- IV தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டு தேர்வாணைய இணையதள பக்கத்தில் http://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/english/syllabus.html வெளியிடப்பட்டு உள்ளது.

முன்னதாக, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - II பதவியின் நேரடி நியமனத்துக்கான கணினிவழித் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்திருந்தது, குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.