மத்திய அரசு கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்டவற்றில், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு, ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்வுகள், தேசிய தேர்வு முகமை எனும் என்.டி.ஏ.,வால் நடத்தப்படுகின்றன
முதல்கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வு, பிப்., 22, 23, 24, 28, 29, 30ல் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன. கணினியில் காலை, மாலை என நடத்தப்படும் இத்தேர்வு ஹால் டிக்கெட், என்.டி.ஏ., இணையதளத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ஒரே நேரத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன், 'டவுன் லோடு' செய்ததால், சிறிது நேரம், 'சர்வர்' முடங்கியது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.