தொடக்க கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கை:
தொடக்க கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, வரும் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரை, ஆண்டு இறுதி தேர்வுகள் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், தேர்வை முன்கூட்டியே நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வரும் 7ம் தேதி முதல், 17ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. புதிய தேர்வு அட்டவணையின்படி, 7 முதல் 11ம் தேதி வரை, தமிழ், விருப்ப மொழி, ஆங்கிலம், கணக்கு பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும்.
நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு, 15ம் தேதி அறிவியல், 17ம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.