திருவண்ணாமலை:ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன், ஐ.ஏ.எஸ்., தேர்வில், வெற்றி பெற்றார்.
சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு, இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில்,
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, சின்னக்கல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்த, ஆடு மேய்க்கும் தொழிலாளி பச்சையப்பன், குமாரி தம்பதியின் மகன் யுவராஜ், 22, என்பவர், 751வது, 'ரேங்க்' பெற்று தேர்ச்சி பெற்றார்.
இவர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 418 மதிப்பெண்கள் பெற்று, பிளஸ்- 1 மற்றும் பிளஸ்- 2, மங்கலம் அரசு பள்ளியில் படித்தார். பின், திருவண்ணாமலை, எஸ்.கே.பி., பொறியியல் கல்லுாரியில், இ.சி.இ., படித்துவிட்டு, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்து வந்தார். தற்போது, ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
யுவராஜ் கூறியதாவது:
சகாயம், இறையன்பு போன்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை முன்னுதாரணமாக நினைத்து படித்தேன். முதலில், சென்னையில் உள்ள மனித நேய மையத்தில், இரண்டு மாதம் படித்தேன்.
அரசு சார்பில் வழங்கிய, மடிக்கணினியை வைத்து, இணையதள வசதியுடன் படித்து, தேர்ச்சி பெற்றேன்.மாநிலத்தில், முதலிடம் வரவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், 74-வது இடம் பெற்றுள்ளேன். பணியில் சேர்ந்து, கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார நடவடிக்கை எடுப்பதில், கவனம் செலுத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.