பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் எமிஸ் பணிகளும் மேற்கொள்ள வேண்டும்' என்று தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்களுக்கு எமிஸ் பணி இல்லை என்ற பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு என்னாச்சு என ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்..
இந்நிலையில் 2016 -2017 முதல் 2024 - 2025 வரை உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கான 7.5 சிறப்பு ஒதுக்கீட்டில் இதுவரை பயனடைந்தவர்கள், தகுதியுள்ளோர் குறித்த விவரம், அவர்கள் எந்தப் பள்ளியை சேர்ந்தவர், என்ன மீடியத்தில் படித்தவர்கள் என எமிஸில் பதிவேற்றிய தகவல்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏராளமான ஆசிரியர் பயிற்றுனர்கள் (பி.ஆர்.டி.இ.,) உள்ளனர். அவர்களை இப்பணியில் ஈடுபடுத்தலாம். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (டி.சி.,) பணிக்கு கூட ஒரு ஆசிரியரைத்தான் கூடுதல் பொறுப்பாக நியமித்துள்ளனர். தற்போது எமிஸ் பணிகள் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.