பிளஸ் 2 விடைத்தாள் திருத்துதல் பணிக்கு ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்
திருத்துதல் பணிகள் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18-ம் தேதியும், ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 20-ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளன. இதற்கு இடைபட்ட ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெறவிருக்கிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது.
இதை உணர்ந்து ஏப்ரல் 19-ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும். மேலும், மற்ற ஆசிரியர்களுக்கும் தொடர் பணிகளுக்கு இடையே சிறு ஓய்வு கிடைக்கும். அவை அடுத்து வரும் நாட்களில் ஆசிரியர்கள் புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதற்கு வழிவகுக்கும். எனவே, ஏப்ரல் 19-ம் தேதி சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.