WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 15, 2025

பத்தாம் வகுப்பு தேர்வு கேள்வியில் குழப்பம்.

 பத்தாம் வகுப்பு அறிவியல் பொதுத்தேர்வில், கட்டாய வினா எண் 22க்கு, தமிழ் வழியில் விடை எழுத முயற்சித்த அனைவருக்கும், இரண்டு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படித்த மாணவர்களுக்கான, அறிவியல் பொதுத் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.

கட்டாய வினா பகுதியில் கேட்கப்பட்டிருந்த, வினா எண் 22, ஆங்கில வழி வினாத்தாளில், சி.எச்., 4 என, அறிவியல் முறைப்படி தெளிவாக கேட்கப்பட்டு இருந்தது. ஆனால், தமிழ் வழி வினாத்தாளில், மீத்தேன் என மட்டுமே கொடுக்கப்பட்டு இருந்ததாக, மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால், தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள், வினாவை புரிந்து எழுத முடியாமல், தவறான புரிதலில் மாற்றி பதிலளித்து உள்ளதாகவும், சிலர் சரியாக விடை எழுதியும் மதிப்பெண் குறைந்து விடுமோ என்ற, அச்சத்தில் உள்ளதாகவும், ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனவே, கட்டாய வினா எண் 22க்கு, தமிழ் வழியில் விடையளிக்க முயற்சித்த அனைத்து மாணவர்களுக்கும், முழு மதிப்பெண்ணான இரண்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.