WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 19, 2014

ஓரிரு வாரங்களில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு!!!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 
12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரம் பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்டப் பாடங்களில் 1,200 பேர் அடங்கிய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட்டது.

இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரின் முழுவிவரங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கான பணி மூப்பு போன்றவற்றுடன் கூடிய தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்க வேண்டும்.

ஒரு வாரத்துக்குள் இந்த விவரங்களுடன் கூடிய தேர்வுப் பட்டியல் வழங்கப்பட்டுவிடும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்பிறகு, இந்தப் பட்டியலின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும். பெரும்பாலும் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்களுக்கான பணி நியமன ஆணைகள், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன.  இந்த விழாவுக்கான தேதி ஒரு சில நாள்களில் இறுதிசெய்யப்படும்  என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல், மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவை இந்த விழாவுக்கு முன்னதாகவே வெளியிடப்பட உள்ளன.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் மொத்தம் 72 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர்.  இதில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மூலம் சுமார் 11 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்கெனவே தமிழ், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆங்கிலம், கணிதம்,  வேதியியல், தாவரவியல், வரலாறு, நுண் உயிரியல் ஆகிய பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களின் திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



21 comments:

  1. Good Morning Friends. Still some weeks we have to go.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. FLASH NEWS

      ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் ...

      ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி தொடர் உண்ணாவிரதம்.

      இரவிலும் போராட்டம் தொடர்வதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

      Satheesh Kumar Satheesh
      August 18, 2014 at 9:50 PM

      நண்பர்களே
      உண்ணாவிரதம் 90% வெற்றி அடைந்துவிட்டது நாளையும் தொடர்கிறது தற்போது திருமதி சபீதா வருவதாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாக நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்

      தயவு செய்து சென்னை அருகில் உள்ள மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்

      முக்கியமாக 2013-2014 பணியிடங்களை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கபட்டுள்ளது

      காஞ்சிபுரம், கடலூர் ,திருவள்ளூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி., சேலம், நாமக்கல், போன்ற வட மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை உண்ணாவிரத்திற்க்கு தங்கள் குடும்பத்தோடு வர வேண்டும்

      நண்பர்களே இது நமது வாழ்வாதர பிரச்சனை கண்டிப்பாக வர வேண்டும் தற்போது 600 க்கும் மேற்பட்ட நண்பர்கள் உள்ளனர் ஆனால் நாம் பாதிக்கபட்டது 8000 நண்பர்கள் அதனால் கண்டிப்பாக நாளை அதிக அளவு நண்பர்கள் வர வேண்டும்

      இப்போது நீங்கள்கேட்கவிட்டால் இனி எப்போதும் கேட்கமுடியாது.

      Satheesh Kumar Satheesh
      August 19, 2014 at 6:58 AM

      நண்பர்களே

      நமது கைது செய்யபட்ட நண்பர்களை காவல் துறையினரர் இன்னும் விடவில்லை

      இன்று சரியாக காலை 9 மணி அளவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகை யிட உள்ளோம் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நண்பர்கள் அனைவரும் காலை 9 மணி முதல் 10 க்குள் ஆசிரியர்தேர்வு வாரியத்திற்க்கு வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறது.

      Delete
  2. Paper 2 list expected soon abt 1500+ for other dept.

    PG appointment counselling within a week or by next wk(phy, com, eco!)

    Paper 1 expected abt 4000 soon(may b by aug 28th)

    3 main process pending before trb.

    Along this process - spl tet ph candidates expecting more candidates to select by existing backlog vacancies of ph abt 1107 from 2007.

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே அனைத்து பீஜீ(Including physics, economics, commerce) &Bt ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் பணி நியமன ஆணை வழங்குவதற்க்கு கல்வித்துறை தயராகிக்கொண்டிருக்கிறது நண்பர்களே, All the best to all future Teachers

    ReplyDelete
    Replies
    1. In madurai high court branch some pH candidate file case in commerce . is it ture news?

      Delete
    2. If any cases in mh? I think it's not affected by publishing final list in commerce .

      Delete
  4. hai kalvikuyil friends gud mrng.nan paper1 la 71.18 weightage.iam bc female.dob 31.07.1986.enaku job kidaikuma.bc ku expected cutt off pathi yarukaavathu idea iruntha knjam share panunga pls.

    ReplyDelete
    Replies
    1. Hi mam i think if u having good percentage in papers1 dnot worried u will get job in paper1 advanced wishes to you mam.

      Delete
    2. thank so much epselva sir.enaku romba bayama iruku sir.yeena already i missed paper2 job.athanithulayavathu kidaikum nu romba ethir paarkaren.ipo elorum 10 years before 12th pathichavanga 800 edukarathe kashtam nu solranga.bt nan 2004 la 12 la 1081(90.08%)eduthen.dted la 86.66% eduthu iruken.nan dted mudichu 8 years finish ayiduchu.intha job kaga en family full ah enakaga romba kshtama viratham la irukanga.kidaichuthuna romba santhosha paduvaanga epselva sir

      Delete
  5. Muthugalai asiriar kavanathirku!..Economics tamil medium eruthi thervu pattiyalil etam petravarkal,Tharpothu 11 merpattavarkal 2013 pg trb il cv mutithu Eruthi pattiyalil varum nilaiel ullanar.evargalal last cut off il erupavar bathikapattullanar.

    ReplyDelete
  6. Muthugalai asiriar kavanathirku!..Economics tamil medium eruthi thervu pattiyalil etam petravarkal,Tharpothu 11 ku merpattavarkal 2013 pg trb il cv mutithu Eruthi pattiyalil varum nilaiel ullanar.evargalal last cut off il erupavar bathikapattullanar.Enave matra patangalai sariparkavum.

    ReplyDelete
  7. I come to understand your point, not only in eco but also in commerce more than 20 peoples were called for CV in Tamil medium quota, but they have already got selected in 2011-12 list. So dont worry TRB will again publish the CV list for Tamil medium alone.The next and last cut off candidate can survive in the next list. This is my assumption only. But Yellam TRB kailthan ullathu. God only can save us(tamil medium candidates)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. R.R sir tamil medium mattum prachanai illai. silar GT and Communitiliem G la vanthuruganga.

      Delete
  8. Sir trb are dont ready to next list. They said back log move on only.

    ReplyDelete
  9. hai friends this my first comment in this website. all the best all selected teacher. god bless you.

    ReplyDelete
  10. Any news about next polytechnic trb exam

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.