2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி தரவரிசை பட்டியல் ஏப்ரல் 22-ம் தேதி வெளியிடப்பட்டது. அகில இந்திய அளவில் 1,009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் நான் முதல்வன் திட்டத்தில் படித்த சிவச்சந்திரன் என்பவர் தமிழ்நாடு அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 23வது இடமும் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்த வெற்றி என்பது அவருக்கு எளிதாக கிடைத்தது இல்லை என்பது அவர் கடந்து வந்த பாதை உணர்த்துகிறது.
போலீஸ் ஆக வேண்டும் என கனவு
சென்னையை சேர்ந்த சிவச்சந்திரனுக்கு சிறிய வயதில் இருந்து போலீஸ் பணியில் சேர வேண்டும் என்பது கனவாக இருந்து வந்தது. இந்த கனவை நினைவாக்கிக்கொள்ள யுபிஎஸ்சி தேர்வை எழுத முடிவெடித்தார். இதற்கு தயாராக தொடங்கிய அவர், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் வழங்கப்படும் பயிற்சியில் இணைந்து பயிற்சி பெற்றார்.
4 முறை தோல்வி
யுபிஎஸ்வி சிவில் சர்வீஸ் தேர்விற்கு 5 ஆண்டுகளாக தயராகி வரும் சிவச்சந்திரன், முதல் 4 முறை தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இந்த பயணத்தில் தன்னை சுற்றி இருந்தவர்கள் உறுதுணையாக இருந்ததாகவும், நான் முதல்வன் திட்ட பயிற்சியில் வழங்கிய விடைத்தாள் பயிற்சி மிகவும் உதவியதாகவும் கூறினார்.
சோர்ந்து போகக்கூடாது
தேர்விற்கு தயாராகும்போது, பலமுறை நம்மால் செய்யமுடியுமா? மீண்டும் எழுத வேண்டுமா? என்ற சோர்வுகள் வந்த தருணத்திலும் விடாமுயற்சியுடன் படித்துகொண்டு இருந்தால் வெற்றி பெற முடியும் என கூறியுள்ளார். மேலும், விடைத்தாள்கள் பூர்த்தி செய்வது தேர்வு களத்திற்கு மிக முக்கிய எனவும், நான் முதல்வன் திட்ட பயிற்சியில் அதனை அதிகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
பிளான் - பி அவசியம்
யுபிஎஸ்சி தேர்விற்கு தயராகும் தேர்வர்கள், தேர்வு மட்டுமில்லாமல் பிளான் - பி வைத்துகொள்ளுவது சிறந்தது என கருத்து தெரிவித்துள்ளார். இந்த 5 வருட பயணத்தில் முதலில் 6 முதல் 8 மணி நேரம் தினமும் படித்ததாகவும், மூன்று வருடங்கள் கழித்து 5 மணி நேரம் வரை படித்ததாகவும், விடைத்தாள்களை வைத்து தேர்வெழுதி பார்த்ததாகவும் அவரின் பயிற்சி முறையை பற்றி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த சிவச்சந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.