WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 17, 2025

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஏமாந்து போவீர்கள்: திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எச்சரிக்கை.

 



தமிழகத்​தில் அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் மற்​றும் அரசு சார்ந்த பொதுத்​துறை நிறு​வனங்​களில் மொத்​தம் 10.50 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். இவர்​களது கோரிக்​கை​களில் முதன்​மை​யானது பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​து​வ​தாகும்.



அரசு ஊழியர்​கள், அவர்​களது குடும்​பத்​தினர் என சுமார் 40 லட்​சம் வாக்​காளர்​கள் உள்ள நிலை​யில், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் குறித்த கோரிக்கை சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முக்​கியப் பங்கு வகிக்​கும் என்று கூறப்​படு​கிறது. இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்​கிணைப்​பாளர் பிரெடெரிக் எங்​கெல்ஸ் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: தமிழக அரசில் கால​முறை ஊதி​யத்​தில் பணிபுரி​யும் அரசு ஊழியர், ஆசிரியர்​களில் 1,98,331 பேர் பழைய ஓய்​வூ​திய திட்​டத்​தி​லும், 6,24,140 பேர் புதிய ஓய்​வூ​தியதிட்​டத்​தி​லும் உள்​ளனர்.

சிபிஎஸ் திட்​டத்​தில் கடந்த மார்ச் 31-ம் தேதிவரை 45,625 பேர் ஓய்வு பெற்​றுள்​ளனர். 7,864 பேர் பணி​யின்​போது உயி​ரிழந்​து​விட்​டனர். 2003-க்​குப் பின் பணி​யில் சேர்ந்த அரசு ஊழியர், ஆசிரியர்​களுக்கு ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யம், பணிக்​கொடை எது​வும் கிடை​யாது. இதர மாநிலங்​களில் அரசு ஊழியர், ஆசிரியர்​களுக்கு ஓய்​வு​பெறும் நாளில் இருப்​பில் உள்ள 40 சதவீத தொகைக்கு சந்தை மதிப்​புக்கு ஏற்ப ஓய்​வூ​தி​யம் கிடைக்​கும். பணிக்​கொடை மற்​றும் குடும்ப ஓய்​வூ​தி​யம் உண்​டு.

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது பழைய ஓய்​வூ​தி​யத்திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என வாக்​குறுதி அளித்​து​விட்​டு, ஆட்​சிக்கு வந்து 4 ஆண்​டு​களுக்கு மேலாகி​யும் கோரிக்​கையை நிறைவேற்​றாமல் இருப்​பது நியாயமல்ல. அடுத்த ஆண்டு ஏப்​ரல் அல்​லது மே மாதம் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், அதற்கு முன் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும். எங்​களுக்கு தேவை வாக்​குறுதி அல்ல, பழைய ஓய்​வூ​திய திட்​டத்​துக்​கான அரசாணை தான் வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணை பொதுச் செயலாளர் கோ.நாகராஜன் கூறும்​போது, “பு​திய ஓய்​வூ​திய திட்​டம் தொடர்​பாக மத்​திய அரசு எந்த அழுத்​தத்​தை​யும் கொடுக்​காத நிலை​யில், பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ஒரே கையெழுத்​தில் நிறைவேற்​றி​விட முடி​யும். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மீண்​டும் வாக்​குறுதி மட்​டும் கொடுத்து வென்​று​விடலாம் என்று கரு​தி​னால், நிச்​ச​யம் ஏமாந்து போவார்​கள். எனவே, இந்த ஆட்​சிக் காலத்​திலேயே பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும். இல்​லா​விட்​டால் வரும் தேர்​தலின்​போது அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களின் நம்​பிக்​கையை பெற முடி​யாது” என்​றார்​.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.