WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 24, 2026

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

 

மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க பிப்.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வில்(க்யூட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அடுத்த கல்வியாண்டின் (2026-27) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தோ்வு மே 11 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜன. 3-இல் தொடங்கி பிப். 4-ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது.

இந்த தோ்வெழுத 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் வாய்ப்பு வழங்க வேண்டுமென மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று க்யூட் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க என்டிஏ மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் https://cuet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக பிப். 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது சிறப்பு வாய்ப்பு என்பதால் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படாது. எனவே, விண்ணப்பிக்கும் போது தகவல்களை சரியாக பதிவிட வேண்டும். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைதளத்தில் அறியலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.