WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 22, 2026

4.1 கோடி சிறார்களுக்கு உடல் பருமன் பாதிப்பு: உலக அளவில் இந்தியாவுக்கு 3-வது இடம்.

 

உலக அளவில் உடல் பரு​ம​னால் பாதிக்​கப்​பட்ட சிறு​வர்​கள் அதி​கம் உள்ள நாடு​களில் இந்​தியா முதல் மூன்று இடங்​களுக்​குள் இருப்​ப​தாக அதிர்ச்​சித் தகவல் வெளி​யாகி​யுள்​ளது. சுமார் 4.1 கோடி சிறு​வர்​களுக்கு இந்த பாதிப்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து உலக உடல் பரு​மன் அட்​லஸ் 2026 அறிக்​கை​யில் சுட்​டிக்​காட்​டப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வில் 5 முதல் 19 வயதுக்​குட்​பட்ட சுமார் 4.1 கோடி சிறு​வர்​கள் அதிக உடல் எடை​யுடன் இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இதில் 1.4 கோடி பேர் அதீத உடல் பரு​மன் பாதிப்​புடன் இருப்​பது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சீனா மற்​றும் அமெரிக்கா​வுக்கு அடுத்​த​படி​யாக இந்​தி​யா​வும் இப்​பெரும் பிரச்​சினையை எதிர்​கொண்​டுள்​ளது. இதன் மூலம், இந்​தியா ஒரே நேரத்​தில் ஊட்​டச்​சத்​துக் குறை​பாடு மற்​றும் அதி​கரித்து வரும் சிறார் உடல் பரு​மன் பாதிப்பு ஆகிய இரு​முனை சவால்​களை எதிர்​கொண்டு வரு​கிறது.

கடந்த 1975-ல் 4% ஆக இருந்த சிறார் உடல் பரு​மன் பிரச்​சினை, தற்​போது உலக அளவில் 20 சதவீதத்தை நெருங்​கி​யுள்​ளது. வரலாற்​றிலேயே முதல் முறை​யாக உலகள​வில் உடல் எடை குறைந்த சிறு​வர்​களை விட, உடல் பரு​மன் கொண்​ட​வர்​களின் எண்​ணிக்கை பரவலாக அதி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பல நாடு​கள் இதைக் கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுத்​தா​லும், பாதிப்​பின் வேகத்​திற்கு ஏற்ப தீர்​வு​கள் எட்​டப்​பட​வில்லை என்​பதே நிதர்​சன​மான உண்​மை. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.