தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்., 24ம் தேதி வரை, முழு ஆண்டு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், ஏப்., 23ல் சட்டசபை தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, ஏப்., 1 முதல் 16ம் தேதி வரை தேர்வுகள் நடத்த ஒப்புதல் பெறப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.
அதன்படி, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்., 1ம் தேதியிலிருந்தும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 6ம் தேதியிலிருந்தும் தேர்வுகள் துவங்கி, ஏப்., 16ம் தேதி நிறைவடைய உள்ளன.
மேலும், ஒன்று, மூன்று, ஐந்து, ஆறாம் வகுப்புகளுக்கு, காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை, எட்டாம் வகுப்புக்கு காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை தேர்வுகள் நடக்கும். அதே போல், இரண்டு, நான்கு, ஏழாம் வகுப்புகளுக்கு, பகல் 2:00 மணி முதல் 4:00 மணி வரை, ஒன்பதாம் வகுப்புக்கு பகல் 2:00 மணி முதல் 4:30 மணி வரை தேர்வுகள் நடக்கும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.