WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 2, 2026

சுயநிதி படிப்புகளுக்கான கட்டணத்தை 10% உயர்த்த சென்னை பல்கலை. ஒப்புதல்.

 

சென்னை பல்​கலைக்​கழக சிண்​டிகேட் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. பல்​கலைக்​கழக நிர்​வாக ஒருங்​கிணைப்​புக் குழு அமைப்​பாள​ரும், உயர்​கல்​வித் துறை​யின் செயலரு​மான பொ.சங்​கர், ஒருங்​கிணைப்​புக் குழு​வின் உறுப்​பினரும், ஆங்​கில இலக்​கி​யத் துறை​யின் தலை​வரு​மான பேராசிரியர் எஸ்​.ஆம்​ஸ்ட்​ராங் ஆகியோர் தலைமை வகித்​தனர். பல்​கலைக்​கழக பதி​வாளர் ரீட்டா ஜான் முன்​னிலை வகித்​தார்.

இக்​கூட்​டத்​தில், சுயநிதி படிப்​பு​களுக்​கான கல்வி கட்​ட​ணத்தை 10 சதவீதம் உயர்த்த உறுப்​பினர்​கள் ஒப்​புதல் அளித்​தனர்.

மேலும், தனி​யார் கல்​லூரி முதல்​வர் நியமன அனு​ம​தி, கிறிஸ்​த​வியல் தொடர்​பான 2 சான்​றிதழ் படிப்​பு​கள் அறி​முகம் உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்​கப்​பட்​ட​தாக சிண்​டிகேட் உறுப்​பினர்​கள் தெரி​வித்​தனர்.

மேலும், தற்​போது சென்னை பல்​கலைக்​கழக இணைப்பு அங்​கீ​காரத்​துடன் செயல்​பட்டு வரும் அடை​யாறு டாக்​டர் எம்​ஜிஆர் ஜானகி மகளிர் கல்​லூரியை, வேல்ஸ் பல்​கலைக்​கழகத்​துடன் இணைப்​ப​தற்கு ஒப்​புதல் அளிப்​பது குறித்​தும் கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​ட​தாக தெரி​கிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.