WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 26, 2026

மாதம் ரூ.14,500 உதவித் தொகையுடன் பிஇ படிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு.

 



பொறியியல் டிப்ளமா படித்த மாணவர்கள் மாதம்தோறும் ரூ.14,500 உதவித்தொகையுடன் பிஇ படிக்க விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் எச்எல் மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனத்தின் முழு உதவியுடன் பிஇ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் ஆகிய தொழில்பயிற்சியுடன் கூடிய பொறியியல் படிப்புகள் வழங்கப்படுன்றன. இந்த 4 ஆண்டு கால படிப்புகளுக்கான அடிப்படை கல்வித்தகுதி பொறியியல் டிப்ளமா ஆகும்.




பிஇ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படிப்பில் சேர பாலிடெக்னிக்கில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இசிஇ, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடங்கள் படித்தவர்களும், பிஇ, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பில் சேர பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல், புரொடக்சன், ஆட்டோமொபைல், உலோகவியல், மரைன் இன்ஜினீயரிங் உள்ளிட்ட பாடங்களை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். டிப்ளமா படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமா படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழில்பயிற்சியுடன் மாதம்தோறும் ரூ.14,500 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், கல்விக்கட்டணம், உணவு, போக்குவரத்து , மருத்துவ காப்பீடு ஆகிய அனைத்து செலவினங்களையும் எச்எல் மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படிப்பில் 2026-27 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.குமரேசன் வெளியிட்டுள்ள அறிவிப்வின் விவரம்:

அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் வரும் கல்வி ஆண்டில் (2026-27) ஒருங்கிணைந்த தொழில்பயிற்சியுடன் கூடிய பிஇ எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், பிஇ மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்புகளில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒவ்வொரு படிப்பிலும் தலா 60 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் (2025-26) டிப்ளமா முடிப்பவர்கள் மட்டுமின்றி 2023-24, 2024-25-ம் கல்வி ஆண்டுகளில் டிப்ளமா முடித்த மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். 2005 ஜனவரி 1-ம் தேதி அல்லது அதற்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும்.

தகுதியுள்ள மாணவர்கள் https://cfa.annauniv.edu/mando2026/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி ஆகும். சேர்க்கை நடைமுறை தொடர்பான முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu) அறிந்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.