WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 28, 2026

கற்பித்தல் செயல்பாடு: ஆய்வு செய்ய வழிகாட்டு நெறிமுறை.

 

பள்​ளி​களில் புதிய பாடத்​திட்ட கற்​பித்​தல் செயல்​பாடு​களை ஆய்வு செய்ய வழி​காட்டு நெறி​முறை​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. இதைப் பின்​பற்றி துறை அலு​வலர்​கள் ஆய்வு செய்ய வேண்​டுமென பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து, பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை: தமிழகத்​தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை​யான பாடத்​திட்​டத்தை மாற்றி அமைக்​கு​மாறு மாநில கல்​வி​யியல் ஆராய்ச்சி நிறு​வனத்​துக்கு (எஸ்​சிஆர்​டிஇ) உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, முதல்​கட்​ட​மாக நடப்பு (2026-27) கல்​வி​யாண்​டில் 1 முதல் 3-ம் வகுப்​பு​களுக்கு முதல் பரு​வத்​துக்​கான புதிய பாடநூல்​கள் அறி​முகப்​படுத்​தப் பட்​டுள்​ளன

இந்த வகுப்​பு​களில் ஆய்வு மேற்​கொள்​ளும் அனைத்து வித​மான துறை​சார்ந்த அலு​வலர்​களுக்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் தற்​போது வெளி​யிடப்​படு​கிறது. அத்​துடன் ஆசிரியர் பதிவேடு குறித்த விவரங்​களும், பாட​வாரி​யான ஆய்​வுப் படிவங்​களும் இணைக்​கப்​பட்​டுள்​ளன. கல்வி அலு​வலர்​கள் இந்த வழி​காட்​டு​தல்​களை முறை​யாக பின்​பற்​றி, வகுப்​பறை கற்​பித்​தலை ஊக்​குவிக்​கும் வகை​யில் ஆய்வு மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.