WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 18, 2026

நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: விழுப்புரம் மாணவர் தேசிய அளவில் 12-வது இடம்.

 



இளநிலை மருத்​து​வப் படிப்​பு ​களுக்​கான நீட் மறு​தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. பஞ்​சாப், ஹரி​யானா மாணவர்​கள் 720-க்கு 715 மதிப்​பெண்​கள் எடுத்து முதலிடம் பிடித்​துள்​ளனர். தமிழகத்​தின் விழுப்​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த மாணவர் வேங்​கடபதி வேலா​யுதம் தேசிய அளவில் 12-வது இடம் பிடித்​துள்​ளார்.

நாடு முழு​வதும் அரசு, தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களின் எம்​பிபிஎஸ், பிடிஎஸ், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள், கால்​நடை மருத்​து​வப் படிப்​பின் அகில இந்​திய ஒதுக்​கீட்டு இடங்​கள் நீட் தேர்​வில் தகுதி பெறு​பவர்​களைக் கொண்டு நிரப்​பப்​படு​கின்​றன. தேசி​யத் தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் இத்​தேர்வை நடத்தி வரு​கிறது.




அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்​றது. தேர்​வுக்கு முன்​ன​தாகவே வினாத்​தாள் கசிந்​தது உறுதி செய்​யப்​பட்​ட​தால், நடந்து முடிந்த நீட் தேர்வை மத்​திய அரசு ரத்து செய்​தது. வினாத்​தாள் கசிவுக்கு காரண​மானவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

இதையடுத்​து, பலத்த பாது​காப்​புடன் நீட் மறு​தேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்​தப்​பட்​டது. நாடு முழு​வதும் 5,500 மையங்​களில் தேர்வு நடை​பெற்​றது. 20 லட்​சம்பேர் தேர்வு எழு​தினர்.

தமிழகத்​தில் 1.36 லட்​சம் பேர் தேர்வு எழு​தினர். இந்​நிலை​யில், https://neet.nta.nic.in என்ற இணை​யதளத்​தில் நீட் மறு​தேர்வு முடிவு​களை தேசி​யத் தேர்​வு​கள் வாரி​யம் நேற்று முன்​தினம் இரவு வெளி​யிட்​டது. இத்​தேர்​வில் 11.21 லட்​சம் பேர் (56 சதவீதம்) தகுதி பெற்​றுள்​ளனர். மாணவர்​களை​விட மாணவி​களே அதிக அளவில் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். பஞ்​சாப் மாநிலத்​தைச் சேர்ந்த ஆர்​யன் குப்​தா, ஹரி​யா​னாவைச் சேர்ந்த பன்​சூல் பன்​சால் ஆகிய இரு மாணவர்​கள் 720-க்கு 715 மதிப்​பெண்​கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்​றுள்​ளனர்.

விழுப்​புரத்​தைச் சேர்ந்த பிரபல எலும்பு முறிவு மருத்​து​வர் அஞ்​சன் ராம்​சந்​திர நாத்​தின் மகன் வேங்​கடபதி வேலா​யுதம், 720-க்கு 705 மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளார். இவர், சென்​னை​யில் உள்ள பிரபல தனி​யார் பள்​ளி​யில் படித்​து, நீட் தேர்வை எழு​தி​னார். தமிழகத்​தில் முதல் இடத்​தை​யும், நாட்​டின் தரவரிசை பட்​டியலில் 12-வது இடத்​தை​யும் பிடித்​துள்​ளார்.

700-க்கு மேல் 19 பேர், 690-க்கு மேல் 138 பேர், 650-க்கு மேல் 1,492 பேர், 600-க்கு மேல் 10,160 பேர், 500-க்கு மேல் 90,780 மாணவர்​கள் மதிப்​பெண் பெற்​றுள்​ளனர். பொதுப் பிரி​வில் 2.91 லட்​சம் பேர், ஓபிசி பிரி​வில் 5.12 லட்​சம் பேர், எஸ்சி பிரி​வில் 1.59 லட்​சம் பேர், எஸ்டி பிரி​வில் 63,716 பேர், பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய பொதுப் பிரி​வில் 95,026 பேர், மாற்​றுத் திற​னாளி​கள் 3,666 பேர் தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

தமிழகத்​தில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க வரும் 23-ம் தேதி கடைசி நாள். தற்​போது நீட் தேர்வு முடிவு​கள் வெளி​யாகி​யுள்​ள​தால், மாணவர்​களின் நீட் மதிப்​பெண்​களை பெற்​று, விண்​ணப்​பத்​தில் சேர்க்​கும் பணிநடந்து வரு​கிறது. அகில இந்​தி​யக் கலந்​தாய்​வு தொடங்​கிய பிறகு, தமிழகத்​தில்​ கலந்​தாய்​வு தொடங்​க உள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.