WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 18, 2026

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தேதி மாற்றம்.

 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்​நிலைத் தேர்வு தேதி மாற்​றப்​பட்​டுள்​ளது. துணை ஆட்​சி​யர், வணிக வரிஉதவி ஆணை​யர், கூட்​டுறவு சங்​கங்​களின் துணைப் பதி​வாளர், பதிவுத் துறை மாவட்​டப் பதி​வாளர், தொழிலா​ளர் நல உதவி ஆணை​யர் பதவி​களில் 28 காலி இடங்​களை நிரப்​புவதற்​காக குரூப்-1 தேர்​வுக்​கான அறி​விப்பு கடந்த ஜூன் 23-ம் தேதிவெளி​யிடப்​பட்​டது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு ஜூன் 30-ல் தொடங்கி நடந்து வரு​கிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 29 ஆகும். முதல்​நிலைத் தேர்வு செப்​.6-ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடை​பெறும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில், தேர்வு தேதி மாற்​றப்​பட்​டுள்​ளது.

இத்​தேர்வு செப்​.27-க்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ள​தாக டிஎன்பிஎஸ்சி செயலர் பனோத் ம்ரு​கேந்​தர் லால் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.