WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, July 19, 2026

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்: ஜூலை 23-ம் தேதி தொடங்குகிறது.

 

பள்​ளிக்​கல்வி மற்​றும் தொடக்​கக் கல்வி இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக்கல்வி அலு​வலர்​களுக்கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை: அரசு, அரசு உதவிப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​கள் பயன்​பெறும் வகை​யில் பள்​ளி, வட்​டாரம், மாவட்​டம் மற்​றும் மாநில அளவில் கலைத் திரு​விழா போட்​டிகள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. அதன்​படி நடப்பு கல்​வி​யாண்​டிலும் கலைத் திரு​விழா போட்​டிகள் ஜூலை 23-ம் தேதி தொடங்​கி, அக்​.28-ம் தேதிவரை நடத்​தப்பட உள்​ளன.

1, 2-ம் வகுப்​பு, 3 முதல் 5-ம் வகுப்​பு, 6 முதல் 8-ம் வகுப்​பு, 9, 10-ம் வகுப்​பு, 11, 12-ம் வகுப்பு என 5 பிரிவு​களாக வயதுக்கு ஏற்ப பிரிக்​கப்​பட்டு போட்​டிகள் நடை​பெற உள்​ளன. இதில் கதை கூறு​தல், வண்​ணம் தீட்​டு​தல், மாறு​வேடம், பேச்​சு, திருக்​குறள் ஒப்​பு​வித்​தல், மெல்​லிசை, நாட்​டுப்​புற நடனம், பரத​நாட்​டி​யம், மணற்​சிற்​பம், வில்​லுப்​பாட்​டு, கிராமிய நடனம், நகைச்​சுவை,பலகுரல் பேச்​சு, பம்​பை, உடுக்கை, பறை, மிருதங்​கம், டிரம்​ஸ், வயலின், நாதஸ்​வரம், கீ போர்டு இசைத்​தல், பொம்​மலாட்​டம் உட்பட பல்​வேறு வகை​களில் போட்​டிகள் நடத்​தப்​படும்.

முதல்​கட்​ட​மாக பள்ளி அளவி​லான போட்​டிகள் ஜூலை 23 முதல் ஆக.14-ம் தேதி வரை​யும், குறு​வட்ட அளவி​லான போட்​டிகள் ஆக.19 முதல் 21-ம் தேதி வரை​யும் நடை​பெறும். அதைத் தொடர்ந்து வட்​டார அளவி​லான போட்​டிகள் ஆக.11 முதல் செப்​.9-ம் தேதி வரை​யும், மாவட்ட அளவி​லான போட்​டிகள் அக்.8 முதல் 15-ம் தேதி வரை​யும், மாநில அளவி​லான போட்​டிகள் அக்.7 முதல் 28-ம் தேதி வரையும் நடத்​தப்​படும்.

மாநில அளவி​லான போட்​டிகளில் வெற்றி பெறு​பவர்​களுக்கு ‘கலை​யரசன்’, ‘கலை​யரசி’ விருதுகள் வழங்கி கவுரவிக்​கப்​படும். மேலும், தரவரிசை​யில் முதன்மை இடத்தை பெறும் 25 மாணவர்​கள் வெளி​நாடு​களுக்கு கல்​விச் சுற்​றுலா அழைத்​துச் செல்​லப்​படு​வார்​கள். இதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களைப் பின்​பற்றி போட்​டிகளை சிறந்த முறை​யில் நடத்தி முடிக்க தேவை​யான பணி​களை அந்​தந்த மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​கள்​ மேற்​கொள்ள வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.