WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 13, 2026

புத்தகங்கள் பற்றாக்குறையா? கல்வித்துறை விளக்கம்!

 

தமிழகத்தில் சில மாவட்டங்களில், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, புதிய பாடப்புத்தகங்கள் வழங்கவில்லை. எண்ணும் எழுத்தும் புத்தகம், ஆசிரியர் கையேடு வழங்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்ட விளக்கம்:

பாடப்புத்தகங்கள் அச்சிடுதல் அல்லது ஆரம்ப கட்ட வினியோகத்தில், எந்தவித தாமதமும் ஏற்படவில்லை.

கல்வியாண்டு தொடங்குவதற்கு முன், பள்ளிகள் வழங்கிய மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்பட்ட பின், புதிதாக மாணவர் சேர்க்கை நடந்தது. அதன் அடிப்படையில், 80,000 கூடுதல் புத்தகங்கள் தேவைப்பட்டன.

அவற்றை அச்சிட்டு, வினியோகிக்கும் பணி, இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சில பள்ளிகளில், பாடப்புத்தகங்கள் பற்றாக்குறை என்பது, கல்வியாண்டு தொடங்கிய பின் மேற்கொள்ளப்பட்ட புதிய மாணவர் சேர்க்கையே தவிர, துறையின் திட்டமிடல் குறைபாடு காரணம் அல்ல.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.