'அரசு பள்ளிகளில் குறிப்பாக பெண்கள் பள்ளிகளில் போதிய கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா. இல்லையெனில் பூர்த்தி செய்ய மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை ஒத்தக்கடையில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. போதிய கழிப்பறை வசதி இல்லை. நிரந்தர துாய்மை பணியாளர்கள் இல்லை.
பள்ளி நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக துாய்மை பணியாளர்களையே நம்பியுள்ளது. கழிப்பறைகளை சரியாக சுத்தம் செய்வதில்லை. 'சானிட்டரி நாப்கின்'களை அகற்றுவதற்கான வசதி இல்லை. சுகாதார பிரச்னைகள் உருவாகின்றன. மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
போதிய கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். போதிய உடற்கல்வி ஆசிரியர்கள், துாய்மை பணியாளர்கள், காவலர்களை நியமிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார்.
நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவு:
அரசு பள்ளிகளில் குறிப்பாக பெண்கள் பள்ளிகளில் போதிய கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா. போதிய துாய்மை பணியாளர்கள் உள்ளனரா. இல்லையெனில் பூர்த்தி செய்ய மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ஜூலை 30ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.