'மத்திய கல்வித்துறையின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல், தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது' என, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மத்திய கல்வித்துறை வெளியிட்ட கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை அறிக்கை 2025 - 26ல், பல்வேறு முக்கிய குறியீடுகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
மாநிலத்தின் மாணவர் - ஆசிரியர் விகிதம் 22: 1 என்ற நிலையில் உள்ளது . இது, தேசிய சராசரியான 24:1 என்பதை விட சிறப்பாக உள்ளது. மேலும், தொடக்க நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. இடைநிலை கல்வியில் இடைநிற்றல் விகிதம் 6.2 சதவீதம்; இது, தேசிய சராசரியான 9.5 சத வீதத்தை விட குறைவு.
மாணவர் சேர்க்கையிலும் தமிழகம் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. 10ம் வகுப்புக்கு அடுத்த மேல்நிலை கல்வியில் மாணவர் சேர்க்கை 85.1 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.