நவம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ள குரூப்-2, 2ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீ வெங்கடபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப்-2, 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒருமுறை பதிவு (ஒடிஆர்) வாயிலாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.89 லட்சம் பேர் பங்கேற்பு:
குரூப்-2, 2 ஏ பதவிகளில் 846 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வை 4 லட்சத்து 89 ஆயிரத்து 884 பேர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்ககது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.