WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 5, 2026

ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தில் முதன்முறையாக வருமான வரி பாடம்.

 

வரலாற்றிலேயே முதன்முறையாக என்.சி.இ.ஆர்.டி.,யின் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில், தனிநபர் வருமான வரி தொடர்பான பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய, மாநில பாடத்திட்டங்களை வடிவமைத்து பாடநூல்களை அச்சிட்டு வருகிறது. சமீபத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடத்திட்டத்தை என்.சி.இ.ஆர்.டி., வெளியிட்டது.

'அண்டர்ஸ்டாண்டிங் சொசைட்டி: இண்டியா அண்ட் பியாண்ட்: பார்ட் 2' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில், வரலாற்றிலேயே முதன்முறையாக தனிநபர் வருமான வரி குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது. 'உங்கள் தனிப்பட்ட நிதியை நிர்வகித்தல்' என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள பாடத்தில், தற்போது நடைமுறையில் உள்ள புதிய வருமான வரி விதிப்பு முறை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், புதிய வரி வரம்புகள் கொடுக்கப்பட்டு, வரியை கணக்கிடும் வழிமுறைகளும் விளக்கப்பட்டுள்ளன. மக்கள் செலுத்தும் வரிப்பணம், நாட்டின் வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்புக்கும் எவ்வாறு பயன்படுகிறது என்பதும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

'வருமான வரியை நேர்மையாகவும், சரியான நேரத்திலும் செலுத்துவது, ஒவ்வொரு குடிமகனின் முக்கிய பொறுப்பு என்ற விழிப்புணர்வை மாணவர்கள் இடையே விதைக்கும் வகையில் இந்த பாடம் வடிவமைக்கப்பட்டுள்ளது' என, என்.சி.இ.ஆர்.டி., தலைவர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.