WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 25, 2026

ஆசிரியர்களுக்கு மீண்டும் சிறப்பு டெட் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை முடிவு.

 

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வு எனும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

தமிழகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம், 'டெட்' தேர்வுகளை நடத்துகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், 'டெட்' தேர்வு தேர்ச்சி கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 4, 5ம் தேதிகளில், சிறப்பு டெட் தேர்வு நடந்தது. மொத்தம் 2 லட்சத்து, 17 ஆயிரத்து 519 பேர் எழுதினர். அவர்களில், 1 லட்சத்து 8,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்; 1.09 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை.

தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நலனுக்காக, வரும் டிசம்பர் மாதம் சிறப்பு 'டெட்' தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆண்டுக்கு இரண்டு முறை 'டெட்' தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பால், பணிபுரியும் ஆசிரியர்கள், டெட் தேர்ச்சி பெற, பள்ளிக் கல்வித்துறை முக்கியத்துவம் வழங்கி வருகிறது.

அடுத்தடுத்து சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்படும் நிலையில், ஆசிரியர் கல்வியியல் பட்டப்படிப்பு எனும் பி.எட்., எம்.எட்., படிப்பை முடித்து, 'டெட்' தேர்வுக்காக காத்திருப்போர் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.